கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில் ”2018-2019ஆம் ஆண்டில் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் அனுப்பிய கரும்பை அரவை செய்து பதிமூன்று மாதங்கள் ஆகியும் நிலுவை தொகை ரூபாய் 23 கோடியை இதுவரை வழங்காமல் ஆலை நிர்வாகம் அலைக்கழிப்பதால் விவசாயிகள், தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
பாக்கி தொகையை உடனடியாக வழங்கக் கோரி கரும்பு சங்க தலைவர் சாந்த மூர்த்தி தலைமையில் முற்றுகைப் போராட்டம், காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்துகொண்டு ஆலை வாயிலின் முன் சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'குளு குளு கொடைக்கானலில் மதுபானங்களுக்கு கிடு கிடு விலை'