ETV Bharat / state

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: போர்க்களமாக மாறிய போராட்டம்... பள்ளியை சூறையாடிய போராட்டக்காரர்கள்!

கள்ளக்குறிச்சி மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது என உறவினர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் போராடி வந்த நிலையில், போரட்டம் தற்போது கலவரமாக மாறியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்
கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்
author img

By

Published : Jul 17, 2022, 12:42 PM IST

Updated : Jul 17, 2022, 3:56 PM IST

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் கருதுகின்றனர். இதனால் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளில் ரத்த கறைகள் இருந்ததாகவும் மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்களமாக மாறிய போராட்டம்

இந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாணவியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர் அமைப்பினர் இன்று (ஜூலை 17) பள்ளி முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பொதுமக்களும் களமிறங்கினர். இதனால், சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

ஒருகட்டத்தில், காவல் துறையினரின் எச்சரிக்கையை மீறி பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் நுழைய முயன்றனர். அவர்களை தடுக்க காவல் துறையினர் முயற்சி செய்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரிகார்டுகளை உடைத்துக்கொண்டு மாணவர்கள், பள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்றனர்.

பள்ளியை சூறையாடிய போராட்டக்காரர்கள்

போராட்டக்காரர்கள் கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில், 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காவல் உயர் அதிகாரி ஒருவரும் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், காவல் துறையினர் தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், மாணவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

ஒரு கட்டத்தில் நுழைவு வாயிலை உடைத்துக்கொண்டு, பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், பொருள்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால், தொடர்ந்து போராட்டக்காரர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும், காவல்துறை வாகனம் தீவைக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எனினும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதுபோல் சென்று, மீண்டும் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கல்வீச்சு சம்பவத்தில் காவல்துறை தரப்பில் பலர் காயமடைந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த கூடுதல் காவலர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.

இதையும் படிங்க: ஆம்புலன்ஸுக்கு இடையூறு ஏற்படுத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்... போலீசிடம் வாக்குவாதம்!

Last Updated : Jul 17, 2022, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.