ETV Bharat / state

கணியாமூர் பள்ளி கலவரம் - நான்கு பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது! - srimathi

கணியாமூர் பள்ளி கலவரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட மேலும் நான்கு பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

நான்கு பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
நான்கு பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
author img

By

Published : Sep 16, 2022, 4:26 PM IST

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரம் மாறியது.

இதில் கலவரக்காரர்களால் பள்ளியிலிருந்து மாணவர்களின் சான்றிதழ், பள்ளிப் பேருந்து, காவல்துறை வாகனம் உள்ளிட்டவை தாக்குதலுக்கு ஆளானதோடு முற்றிலுமாக தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் இதுவரை 26 சிறார்கள் உட்பட 399 பேரைக் கைது செய்தனர். மேலும் இந்தச்சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் உள்ளனர்.

இந்த நிலையில் பள்ளியிலிருந்த மாணவர்களின் சான்றிதழ்களை எரித்தது மற்றும் பள்ளிப்பேருந்து, காவல்துறை வாகனத்தை தீயிட்டுக்கொளுத்தியது, காவல் துறையினர் மீது கற்களை வீசித்தாக்கியது உள்ளிட்ட முக்கிய குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட, முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட பெரியசிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சர்புதீன், உலகங்காத்தான் கிராமத்தைச்சேர்ந்த சரண்ராஜ், வி.மாமந்தூர் கிராமத்தைச்சேர்ந்த லட்சாதிபதி, தொட்டியம் கிராமத்தைச்சேர்ந்த மணி ஆகிய நான்கு பேரையும் மாவட்ட எஸ்.பி. பகலவன் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் சரவணகுமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் கணியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட 8 பேர் இதுவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சேலத்தில் போக்குவரத்து காவலரைத் தாக்கிய முன்னாள் எம்.பியின் உறவினர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.