மாசி, பங்குனி மாதங்களில் கோயில் திருவிழாக்கள், திருமண விழாக்கள், பள்ளி விடுமுறை போன்றவற்றைக் கருத்தில்கொண்டு மலர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் தற்போது வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக பயிரிடப்பட்ட மலர்களைப் பறிக்க முடியாமலும், பறிக்கப்பட்ட மலர்களை சந்தைக்கு அனுப்ப முடியாமலும் தவித்து வருவதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் மலர்களைப் பயிரிட்ட விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடுகளை ஈடு செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை மூலம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மலர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ் வளர்த்த மதுரையில் வாடும் கலைஞர்கள்: கவனம் கொள்ளுமா அரசு?