கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்காக இந்திலி கிராமத்திற்குச் சென்று விட்டு, மீண்டும் தங்களது சொந்த கிராமமான கீரனூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, ஏமப்பேர் மேம்பாலம் அருகே எதிரே வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தின் மீது, மோதாமல் இருக்க, ஓட்டுநர் வாகனத்தை திருப்ப முயற்சித்தபோது, நிலை தடுமாறி வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பமா? - உங்களுக்கான அறிவிப்பு