ETV Bharat / state

ரத்த மாதிரிகளை கண்டறிய நடமாடும் வாகன பரிசோதனை அறிமுகம்! - ரத்த மாதிரிகளை கண்டறிய நடமாடும் வாகன பரிசோதனை அறிமுகம்

கள்ளக்குறிச்சி: கரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ரத்தம் மற்றும் சளி உள்ளவர்களை பரிசோதனை செய்யும் நடமாடும் வாகனத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

covid 19 testing
covid 19 testing
author img

By

Published : Apr 12, 2020, 3:26 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்படி வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் காய்ச்சல் இருமல் மற்றும் சளி உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.

சமூகவிலகலை கடைப்பிடிக்கும் விதமாக, பொதுமக்கள் மருத்துவமனைக்கு பயணம் செய்வதை தவிர்க்கும் பொருட்டு அவரவர் பகுதியிலேயே சளி மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்யும் நடமாடும் பரிசோதனை மையம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுகாதாரத் துணை இயக்குனர் பொற்கொடி, சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கிரண் குர்ராலா கூறுகையில், ”தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதாரக் குழுவின் மருத்துவர்கள் மூலம் இருமல் மற்றும் காய்ச்சல் உள்ள நபர்களை கண்டறிவார்கள். அதேபோன்று, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்தவர்களுக்கும் இந்த நடமாடும் பரிசோதனை மையத்தின் மூலம் ரத்த மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்றார்.

இதையும் படிங்க: தலைவர்கள் சிலைக்கு பொதுமக்கள் மாலை அணிவிக்க தடை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.