ETV Bharat / state

சுதந்திர தினத்தன்று யார் கொடி ஏற்றுவது - பேச்சுவார்த்தையில் சமரசம்

கள்ளக்குறிச்சி அருகே சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவருக்கு பள்ளியில் கொடி ஏற்ற மறுக்கப்பட்ட விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றதில் சமரசம் ஏற்பட்டது.

ஊராட்சி தலைவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சுதந்திர தினத்தன்று கொடி ஏற்ற எதிர்ப்பு!!

author img

By

Published : Aug 9, 2022, 11:57 AM IST

கள்ளக்குறிச்சி: கச்சிராபாளையம் அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வழக்கமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர் கொடியேற்றுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு 5 ஆண்டு காலமாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் இணைந்து கொடியேற்றி வந்தனர்.

தற்பொழுது ஊராட்சி மன்ற தேர்தல் நடைபெற்று தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு ஒரு தரப்பினர் ஊராட்சி மன்ற தலைவரே அரசு மேல்நிலைப் பள்ளியில் கொடியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில், மற்றொரு தரப்பினர் மறுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் தற்பொழுது உள்ள பெண் ஊராட்சி மன்ற தலைவர் சுதா தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர் என்பதால் அவர் கொடியேற்ற மறுப்பு தெரிவிப்பதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஊராட்சி தலைவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சுதந்திர தினத்தன்று கொடி ஏற்ற எதிர்ப்பு!!

இதனை தொடர்ந்து இன்று சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருதரப்பினர் இடையே சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாகவும், அமைதியாகவும் கொண்டாடும் நோக்கத்தோடும், சாதி மோதல்களை தவிர்க்கும் நோக்கத்தோடும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவரும், அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியரும் கொடியேற்ற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதை அடுத்து இருதரப்பினரும் சமாதானமாக சென்றனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 281 சவரன் தங்கம், 30 கிலோ வெள்ளி கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.