கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் கள்ளக்குறிச்சி பாஜக மாவட்ட தலைவர் அருள் முன்னிலையில் சக்தி கேந்திரா பொறுப்பாளர்களுக்கான கூட்டம் இன்று (ஜன.7) நடந்தது. இந்த கூட்டத்தில், முன்னதாக பாஜகவின் மாவட்ட தலைவராக இருந்த பாலசுந்தரம் தனது ஆதரவாளருடன் வந்திருந்தார்.
அப்பொழுது பாஜகவின் முன்னாள் மாவட்ட தலைவராக இருந்த பாலசுந்தரம் ஆதரவாளர்கள் அவர் நியமித்த பல்வேறு நிர்வாகிகளை மாற்றியதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து எழுந்த வாக்குவாதத்தில் இரு தரப்பு பாஜகவினரும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, இது அக்கட்சியினரிடையே இடையே பயங்கர மோதலாக மாறிய நிலையில், இரு தரப்பினரும் ஒருவர் மீது மற்றொருவர் அங்கிருந்த நாற்காலிகளைத் தூக்கி வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் போலீசார் உடனடியாக அவர்களைத் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பினர். இதனால், அங்கு போர்க்களம் போல் காட்சியளித்தது. இவ்வாறு பாஜகவினர் இரு கோஷ்டிகளாகப் பிரிந்துகொண்டு தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 'தமிழர்கள் தன்னுரிமைக் கழகம்' என்ற புதிய கட்சி தொடங்கிய பழ கருப்பையா!