கள்ளக்குறிச்சி: வடபொன்பரப்பி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேல்சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் தணிகாசலம், அண்ணாதுரை மகன் கார்த்திக் ஆகிய இருவரும் தன்பால் ஈர்ப்பாளர்களாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களின் உறவுமுறை குறித்து கிராம மக்கள் தவறாக பேசியதால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வடபொன்பரப்பி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கணவனை கொன்ற வழக்கில் ஆசிரியை கைது!