ETV Bharat / state

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது - ரூ.20 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக இணையதளம் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்த 20 லட்சம் ரூபாய் பணம், சிம்கார்டுகள், செல்ஃபோன்கள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

author img

By

Published : Oct 28, 2021, 10:22 PM IST

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

கள்ளக்குறிச்சி: கிருஷ்ணா நகரில் இணையதளம் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக்கிற்குத் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்படி கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சூதாட்டம் நடைபெற்ற வீட்டை சுற்றி வளைத்தனர்.

பின்பு உள்ளே சென்று பார்த்தபோது கணினி வைத்து சிலர் இணையதளத்தில் (One X Bet App) பந்தயம் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை கைது செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர்.

விசாரணையில், க.செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தலைமையில் வீடு வாடகைக்கு எடுத்து இணையதளம் மூலம் பெட்டிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி, கோகுல்நாத், மணிவேல், அரவிந்த், பிரகாஷ், மணிகண்டன், பாலாஜி ஆகிய ஒன்பது பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இணையதள சூதாட்டம்

இந்நிலையில், இணையதள சூதாட்டத்திற்காக பயன்படுத்திய சுமார் 30 செல்ஃபோன்கள், 400 சிம்கார்டுகள், விலை உயர்ந்த கார், இருசக்கர வாகனங்கள், விலை உயர்ந்த கணினி உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள், சுமார் 20 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

இவர்கள் இணையதளம் மூலம் பலரிடம் பல கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இணையதள சூதாட்டம் என்பது ஏதோ ஒரு குழு உருவாக்கியது, அந்த கேமை எப்படி நீங்கள் விளையாட வேண்டும் என அனைத்தும் அவர்களே (programme) திட்டம் செய்து விடுகின்றனர். பிறகு நீங்கள் என்னதான் புத்திசாலித்தனமாக விளையாடினாலும் அவர்கள் ஒரு இணையதள கோட் (online code) மூலமாக வெற்றி பெற்று விடுவார்கள்.

காவல் துறை எச்சரிக்கை

இந்த ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் பலர் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் இணையதள சூதாட்டங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் சூதாட்டத்தால் எவ்வாறு குடும்பங்கள் அழிந்து போகின்றன என்ற குறும்படம் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பாக வெளியிடப்பட்டது.

எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சூதாட்டத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: யார் இந்த ஜம்தாரா கொள்ளையர்கள்? - பயிற்சி பெற்று சைபர் மோசடியில் ஈடுபடும் ஊர் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.