ETV Bharat / state

முதலமைச்சரை பாகுபலி 2 பிரபாஸாக சித்தரித்து பேனர்! - kallakurichi admk news

பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் போல, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியின் இரண்டாம் பாகத்தைத் தொடர்வார் என அக்கட்சியினர் பாகுபலி திரைப்படத்தை போல சித்தரித்து டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர் அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளது.

digital bahubali cm palaniswami
digital bahubali cm palaniswami
author img

By

Published : Jan 30, 2021, 7:16 AM IST

Updated : Jan 30, 2021, 8:51 AM IST

கள்ளக்குறிச்சி: மாதவச்சேரி கிராமத்தில் முதலமைச்சருக்கு பாகுபலி 2 படத்திற்கு இணையாக முதலமைச்சர் படம் வைத்துச் சித்தரிக்கப்பட்ட டிஜிட்டல் பேனர், கட்சி தொண்டர்களால் வைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளரும், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணையத்தின் தலைவருமான ஏஎஸ்ஏ .ராஜசேகர் என்பவரின் ஆதரவாளரான, கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றியத்தின் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தமிழரசன் தான், இத்தகைய டிஜிட்டல் பேனரை வடிவமைத்து வைத்துள்ளார்.

பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் போலவும், பாகுபலி திரைப்படத்தில் வரும் கதாநாயகன் பிரபாஸ் போன்றும் உருவாக்கப்பட்டிருந்த அந்த டிஜிட்டர் பேனரில், எடப்பாடி பழனிச்சாமி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, “எடப்பாடி கே பழனிச்சாமி எனும் நான்” என்ற இரண்டாம் பாகத்தைத் தொடர்வார் எனக் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பாகுபலி 2 திரைப்படத்திற்கு இணையாகச் சித்தரிக்கப்பட்ட முதலமைச்சர்

அதிமுகவில் எம்ஜிஆர்- ஜெயலலிதா ஆகிய இரண்டு தலைமுறை தலைவர்கள் மறைந்துவிட்ட சூழலில், அதிமுகவின் மூன்றாம் தலைமுறை தலைவராக எடப்பாடி பழனிச்சாமியைக் கட்சியினர் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை, இதன் மூலம் தெரிந்தது கொள்ளலாம் என்பதை உணர்த்துவதாக இந்த பேனர் அமைந்திருந்தது.

Last Updated : Jan 30, 2021, 8:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.