கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, அதன் சுற்று வட்டார பகுதிகளான இறையூர், எலவனாசூர்கோட்டை, குன்னத்தூர், ஆசனூர், வட குரும்பூர், குமாரமங்கலம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று (ஜூலை.8) நள்ளிரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
இதன் காரணமாக குமாரமங்கலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாயின.
ஏற்கனவே கரோனா காலம் என்பதால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் எடை போடுவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், மழை காரணமாக நெல் மூட்டைகள் சேதமானது விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கியது.