கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதைத் தடுக்கும்விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திம்மாபுரம், ஈரியூர், பங்காரம், காட்டுக் கொட்டாய் ஆகிய பகுதிகளில் பறிமுதல்செய்த 1880 லிட்டர் விஷ சாராயம் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி நீதித் துறை நடுவர் அருண்பாண்டியன் உத்தரவின்பேரில் பறிமுதல்செய்து வைத்திருந்த 1880 லிட்டர் சாராயத்தை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் இன்று (ஜூலை 31) சித்தேரியின் கரைப்பகுதியில் கீழே கொட்டி தீவைத்து எரித்தனர்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் சாராயம் காய்ச்சிய நபர் கைது