கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நாளை (ஆகஸ்ட் 10) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருவதையொட்டி அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், செய்தியாளர்கள், நலத்திட்ட உதவிகளில் கலந்துகொள்ளும் மகளிர் சுய உதவிக் குழுவினர், பொதுமக்கள், கட்சியினர் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதோடு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியோடு அமர்வதற்கானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க...அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரிக்கு கரோனா