ETV Bharat / state

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம்- விக்கிரமராஜா!

கள்ளகுறிச்சி: புதிய வேளாண் சட்டத்தால் விலைவாசி உயரும் அபாயம் இருப்பதாக வணிகர் சங்கப்பேரவை தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

vikramaraja press meet
vikramaraja press meet
author img

By

Published : Dec 8, 2020, 10:38 PM IST

கள்ளக்குறிச்சியில் வணிகர் சங்க பேரவையின் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், புதிய வேளாண் சட்டம் காரணமாக விலைவாசி உயர கூடிய ஆபத்து இருக்கிறது. குறிப்பாக வெங்காயம், உருளைக்கிழங்கு, எண்ணெய் வித்துக்கள், பருப்பு வித்துக்களை அத்தியாவசிய பொருள்களில் இருந்து அகற்றப்பட்டிருக்கிறது பேராபத்தை ஏற்படுத்தும்.

மேலும், கள்ளக்குறிச்சியில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ரயில் திட்டம் நிலுவையில் உள்ளதால் அதை துரிதப்படுத்த வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக தோற்றுவித்த பிறகு இன்னும் வளர்ச்சி பாதைக்கு செல்லவில்லை. அதேபோல் கள்ளக்குறிச்சியில் ரிங்ரோடு உடனடி அவசியமாக தேவைப்படுகிறது.

வணிகர் சங்க பேரவையின் தலைவர் விக்கிரமராஜா

குளிர்காலத்தில் கடுமையாக மக்கள் பணி செய்த காரணத்தினால் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த வியாபாரிகளின் குடும்பத்திற்கு மாநில அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

தொடர்ந்து, வள்ளுவர் கோட்டத்தில் புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக போராடும் அமைப்புகளோடு இணைந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை(டிச.8) தமிழ்நாடு வணிகர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவிட்-19க்கு பின் முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் போப் பிரான்சிஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.