கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காவல் துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டதால் திருட்டு சம்பவங்கள் குறைந்தன.
இந்நிலையில் நேற்று (ஆக. 26) இரவு உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் மணிராஜ், ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை (பல்சர்) வீட்டின் முன்பு நிறுத்தினார்.
நள்ளிரவின்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த வாகனத்தை சர்வ சாதாரணமாக கள்ளச்சாவி போட்டு திருடிச் சென்றனர். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் மணிராஜ் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மீண்டும் இருசக்கர வாகனங்களை திருடும் சம்பவம் ஆரம்பித்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் வாகனம் திருட்டு: போலீசார் விசாரணை