உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்திவரும் நிலையில் நாடு முழுவதும் 144 தடைவிதிக்கப்பட்டு அமலில் இருந்துவருகிறது. இந்த நிலையில் 16ஆம் தேதிக்கு முன்னரே பதிவுசெய்யப்பட்ட திருமணங்களை நடத்தலாம் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே சு. ஒகையூர் கிராமத்தில் சின்னதுரை - சுஸ்மிதா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கோயிலில் நடைபெறவிருந்த இத்திருமணம், கரோனா வைரஸ் தாக்கத்தால் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் அவர்களது திருமணம் வீட்டிலேயே எளிய முறையில் நடைபெற்றது.
திருமண விழாவில் மணமக்கள் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் முகக்கவசம் அணிந்து திருமணம் செய்துகொண்டனர். மேலும் மணமக்களின் பெற்றோர் உள்பட திருமணத்தில் 20 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இதில் பலரும் முகக்கவசம் அணிந்தவாறே திருமண விழாவில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வென்டிலேட்டரில் 4 பேருக்கு சுவாசம் அளிக்க புதிய கருவி