கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் பாமக வேட்பாளர் ராஜாவை ஆதரித்து சின்ன சேலம் பேருந்து நிலையத்தில் அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "விவசாயிக்கும், அரசியல் வியாபாரிக்கும் இடையே நடைபெறும் இந்தத் தேர்தலில் விவசாயி வெற்றி பெற வேண்டும். கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க முதலில் கோரிக்கை வைத்தவர் மருத்துவர் ராமதாஸ்.
ராசா உனக்கு இருக்கு ராசா..
நாங்கள் பெண்களை தெய்வங்களாக மதிப்பவர்கள். பெண் தெய்வங்களான திரௌபதி, கண்ணகியை வழிபடுபவர்கள். அப்படிபட்ட பெண்களை கொச்சையாக பேசும் ராசா... உனக்கு இருக்கு ராசா.
நயன்தாரா குறித்து அவதூறாகப் பேசிய ராதாரவியை உடனே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிய ஸ்டாலின், ஆ.ராசாவை ஏன் நீக்கவில்லை?
திமுகவை புறக்கணிக்க பெண்கள் தயார்
இதுவே அதிமுக கூட்டணியில் யாராவது இப்படி பேசியிருந்தால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார். பெண்கள் குறித்து திமுகவினர் தொடர்ந்து அவதூறாக பேசி வருவதால் திமுகவை புறக்கணிக்க பெண்கள் தயாராகிவிட்டார்கள்" என்று தெரிவித்தார்.