தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. நடைபெறவிருக்கும் தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த அனைத்துக் கட்சி கூட்டம் ஆட்சியர் கிரண்குராலா தலைமையில் நடைபெற்றது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின் காரணமாக முன்னனுமதியற்ற பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை, வேட்பு மனுத் தாக்கல், வாகன அனுமதி, வேட்பாளருக்கான தேர்தல் செலவினங்கள் குறித்த தரவுகளை பாதுகாத்தல், எவையெல்லாம் விதிமீறல் என்பன குறித்து ஆட்சியர் அனைத்துக் கட்சி உறுப்பினர்களிடம் தெளிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் சார் ஆட்சியர் ஸ்ரீ காந்த், அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : தடம் மாறும் மாணவர்களின் மனம் மாற்ற முயற்சிக்கும் புகைப்படக் கலைஞர்