கள்ளக்குறிச்சி: சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து முயன்று வருவதாகவும், அதிமுகவை காப்பாற்றுகின்ற தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இல்லை என்றும் அனைத்து தொண்டர்களும் அறிந்து உள்ளனர்.
மேலும், "அதிமுக தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றைத் தலைமையின் கீழ் தான் அதிமுக இருக்க வேண்டும் என நினைத்து வருகின்றனர். திமுகவை எதிர்க்கக்கூடிய ஒரே துணிச்சலுடைய தலைவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் மீது உண்மையிலேயே பற்று இருந்தால் தயவு கூர்ந்து ஒதுங்கி இருங்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவதற்கு ஒத்துழையுங்கள்.
உங்களது வாரிசுக்கும் அது நல்லது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 49 செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்