கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்வராஜ் - சுபலட்சுமி தம்பதி. கூலி தொழிலாளியான இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையாக கருவுற்ற சுபலட்சுமி பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி அரசு மருவத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த மாதம் 22ஆம் தேதி சுபலட்சுமிக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தன.
ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பெற்றெடுத்ததால், அந்த குழந்தைகள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் 3 குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நவம்பர் 22ஆம் தேதி 3 பெண் குழந்தைகளும் சாதாரண வார்டுக்கு மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மாற்றப்பட்டனர். தற்போது தாயும், 3 பெண் குழந்தைகளும் நலமாக உள்ளனர்.
இது குறித்து குழந்தையின் தாய் சுபலட்சுமி கூறுகையில், “எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். தனியார் மருத்துவமனைக்கு செல்ல வசதி இல்லாததால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தோம். இங்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர்.
3 பெண் குழந்தைகளும் தற்போது நலமுடன் உள்ளது. எனது குடும்பம் மிக ஏழ்மையான குடும்பம் என்பதால் 3 பெண் குழந்தைகளையும் வளர்க்க சிரமமாக உள்ளது. எனவே பெண் குழந்தைகளை வளர்க்க அரசு உதவி செய்ய வேண்டும்” என தமிழக அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: பழைய ஓய்வூதிய திட்டம்: அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ஊழியர்கள்!