கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற கூத்தாண்டவர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
கடந்த 5ஆம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கிய இத்திருவிழாவின் 17ஆவது நாள் திருவிழாவான நேற்று திருநங்கைகள் 'அரவான்' என்னும் கடவுளை தன் கணவனாக ஏற்று தாலிகட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று (ஏப்.20) காலை திருநங்கைகள் அரவானுக்கு கட்டிய தாலியை அறுத்து தேர் ஊர்வலம் வருவது வழக்கம்.
10 பேர் காயம்: அவ்வாறு தேர் ஊர்வலம் வந்து கொண்டிருந்தபோது, சிலர் கோயிலின் அருகே இருந்த வீட்டின் மேல் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொழுது வீட்டுச்சுவரின் கைப்பிடி சுவர் இடிந்து கீழே விழுந்தது. இதில் 2 குழந்தைகள், ஒரு திருநங்கை உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இதுகுறித்து திருநாவலூர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கூத்தாண்டவர் கோயில் திருவிழா கோலாகலம்!