ETV Bharat / state

மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு

author img

By

Published : Apr 19, 2020, 3:40 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார்.

இளைஞர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு
இளைஞர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சிங்கிரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர், அரசு மதுபான குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றிவருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது கரோனா தாக்குதல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்த சிவக்குமாருக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவம் சமைக்க தோன்றியுள்ளது. இதையடுத்து, அவர் தனது உறவினர்களான சக்திவேல், ராமசாமி, மணிகண்டன், அரிகரகாந்த், சுபாஷ்சந்திரபோஸ், யோகேஸ்வரன் ஆகிய ஏழு பேரும் சேர்ந்து அதிகாலையில் காசிபாளையம் பகுதியில் செல்லும் பவானி ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

இளைஞர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு

கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயி குத்தகைக்கு சாகுபடி செய்யும் வாழைத்தோட்டத்தின் வழியாக பவானி ஆற்றுக்குச்சென்றவர்கள் ஆற்றில் இறங்கி மீன்களை டார்ச்வெளிச்சத்தில் கத்தியில் வெட்டி பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிவக்குமார் மட்டும் வேறு இடத்திற்கு சென்று மீன்களை பிடிக்க வாழைத்தோட்டத்தின் பக்கவாட்டில் சென்றபோது வாழைகளை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியில் சிக்கி அலறியுள்ளார்.

சிவக்குமாரின் அலறல் சத்தம் கேட்ட மற்ற ஆறு பேரும் சிவக்குமார் இருந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது சிவக்குமாரை காப்பாற்ற சென்ற மணிகண்டன் என்பவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. அதனால் சுதாரித்துக்கொண்ட மற்றவர்கள் சிவக்குமாரைக் காப்பாற்ற மாற்று வழியை யோசிக்கும் முன்பே சிவக்குமார் சோலார் மின்வேலி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார்.

அதன் பின்னர் கத்தூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடத்தூர் காவல்துறையினர், மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சிவக்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளர்.

இதையும் படிங்க: இருமல், சளி காரணமாக பெண் உயிரிழப்பு; கரோனா என மக்கள் அச்சம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.