ETV Bharat / state

கோழித்தீவன மூட்டை சரிந்து தொழிலாளி உயிரிழப்பு- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

ஈரோடு: தனியாருக்கு சொந்தமான தீவனத் தொழிற்சாலையில் கோழித்தீவன மூட்டை சரிந்து விழுந்து உயிரிழந்த தொழிலாளிக்கு, உரிய இழப்பீட்டுத்தொகைக் கோரி உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

author img

By

Published : Oct 24, 2020, 9:57 PM IST

protest
protest

ஈரோடு மாவட்டம் சாவடிப்பாளையம் புதூரில் தனியாருக்குச் சொந்தமான தீவனத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சரக்கு ரயிலில் வரும் தீவனங்களை தொழிற்சாலைக்கு இறக்கி ஏற்றும் பணியில் 50க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (அக்.24) வழக்கம்போல் ரயிலில் வந்த கோழித்தீவன மூட்டைகளை இறக்கும் பணியில் ஈடுபட்டபோது, கோழித்தீவன மூட்டைகள் சரிந்து விழுந்து முத்துச்சாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முத்துச்சாமியின் உடல் உடற்கூறாய்வு செய்த பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இறந்தவருக்கான உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கினால் மட்டுமே உடலை பெறுவோம் என தொழிலாளியின் உறவினர்கள் தெரிவித்தனர். இழப்பீட்டுத்தொகை கோரி சாவடிப்பாளையம் புதூரில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி காவல்துறையினரும், தனியார் தொழிற்சாலை அலுவலர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின்போது ஈமச்சடங்கிற்கான தொகை உடனடியாக வழங்குகிறோம், பின்னர் இழப்பீட்டு தொகை தருவதாக நிர்வாகம் தெரிவித்தது.

தொழிலாளியின் உறவினர்கள் காத்திருப்பு போராட்டம்

இதனை ஏற்க மறுத்த உறவினர்கள் இழப்பீட்டு தொகை வழங்கினால் மட்டுமே உடலை பெறுவோம் என காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மனுதர்ம நூலை விமர்சித்த எம்பி திருமாவளவன் : மாவட்ட வாரியாக பாஜகவினர் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.