தமிழ்நாடு முழுவதும் பருவமழை அதிகரித்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புளியம்கோம்பை வனப்பகுதியில் சில நாள்களாக மழை பெய்தது.
இதனால் வனப்பகுதியில் பெய்த மழைநீர் அருவியாக கொட்டியது. பல்வேறு அருவிகளில் இருந்து கொட்டிய மழை வெள்ளம் காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து வனஓடைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் புளியம்கோம்பை பள்ளத்தில் திடீரென காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக பள்ளத்தின் ஓரமாக உள்ள ஆட்டுப்பட்டிகளில் இருந்து ஆடுகளை வெளியேற்றினர். இந்த வெள்ளநீர் சூரிப்பள்ளம் வழியாக பவானி ஆற்றை சென்றடைந்தது. காட்டாற்று வெள்ளம் காரணமாக நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மான் இறைச்சி சமைத்தவர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் அபராதம்!