ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட புதுப்பீர்கடவு பகுதிக்கு வந்த காட்டு யானை, விவசாயி செல்வன் என்பவரது விளைநிலத்தில் புகுந்து வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது.
தொடர்ந்து விவசாயி மகேஸ்வரி என்பவரது விளைநிலத்திலும் புகுந்து அட்டகாசம் செய்துவிட்டு, வனப்பகுதிக்குள் காட்டு யானை சென்றது.
![காட்டு யானையால் வாழைகள் சேதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-04-sathy-elephant-damages-photo-tn10009_28012021204245_2801f_1611846765_71.jpg)
தற்போது காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: காட்டு யானை தாக்கியதில் முதியவருக்கு கை முறிவு!