ETV Bharat / state

'நீட் தேர்வால் கஷ்டப்படுவது நாங்கள்தான்' - அமைச்சர் செங்கோட்டையன் காட்டம்

ஈரோடு: நீட் தேர்வுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டு கஷ்டப்படுவது நாங்கள்தான் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

sengottaiyan
sengottaiyan
author img

By

Published : Feb 5, 2020, 10:36 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் ரூ.61.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்தார்.

தொடர்ந்து 36 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கறவைமாடு கடனுதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க திறப்பு விழா

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் திரும்ப அளிப்பதுதான் அவர்களது கடமை. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்ளை குறித்து தற்போது வரைபடம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரம் வந்த பிறகே அது குறித்து ஆய்வு செய்யமுடியும்.

பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது எதிர்கட்சிகளின் போராட்டம் நடத்தியதற்கு கிடைத்த வெற்றி என்பதெல்லாம் தவறான செய்தி. மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தருமளவிற்கும் மீண்டும் பயிற்சியளித்து திறன் மேம்பாடு செய்யலாம் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாயக்கல்வித் திட்டத்தில் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து அனைவருக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போன்று செயல்பட்டால் நன்மை தரும். நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளால் பல பிரச்னைகள் உள்ளன. நீட்தேர்வு விலக்கு கோராமல் பயிற்சி அளிப்பதாக குற்றம் சுமத்துகின்றனர். நீட் தேர்வு வருவதற்கு கையெழுத்திட்டது காங்கிரஸ் ஆட்சிதான். ஆனால் அவர்கள்தான் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு இடையில் சிக்கிக்கொண்டு கஷ்டப்படுவது நாங்கள்தான்.

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் ஆகியோரை சந்திக்கின்ற போதெல்லாம் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.

மேலும், அரசுப் பள்ளிகளில் இந்தி விருப்பப்பாடமாக வேண்டும் என ஒருசில ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஆசிரியர்கள் இருக்கின்ற பாடத்தை ஒழுங்காக சொல்லிக்கொடுத்தாலே போதும் என்றார்.

இதையும் படிங்க...

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - செங்கோட்டையன் அறிவிப்பு

Intro:Body:தேர்வு ரத்து: பொதுத்தேர்வுக்கு வசூலித்த கட்டணத்தை திருப்பி செலுத்த அறிவுரை:அமைச்சர் செங்கோட்டையன்

tn_erd_02_sathy_kas_minister_vis_tn10009

5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு வரும் காலங்களிலும் ரத்து செய்யப்படும் மீண்டும் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தற்போது தேர்வுக்காக வசூல் செய்யப்பட்ட தொகையை ஆசிரியர் திருப்பி அளிக்கவேண்டும் என்றும் இந்தி விருப்பபாடமாக வேண்டும் என்ற ஆசிரியர்கள் இருக்கின்ற பாடங்களை ஒழுங்காக சொல்லிக்கொடுத்தாலே போதும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் ரூ.61.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்து 36 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கறவைமாடு கடனுதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்ப்பட்ட தொகையை தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு ஆசிரியர்கள் திரும்பி அளிப்பதுதான் அவர்களது கடமை. 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு தற்போதுள்ள நிலையே தொடரும் என பதிலளித்துள்ளார். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்ளை குறித்து தற்போது வரைபடம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது முழு விபரம் வரவில்லை வந்தால் தான் அது குறித்து ஆய்வு செய்யமுடியும். 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய்பட்டது எதிர்கட்சிகளின் போராட்டம் நடத்தியதற்கு கிடைத்த வெற்றி என்பதெல்லாம் தவறான செய்தி மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தருமளவிற்கும் மீண்டும் பயிற்சி அளித்து திறன் மேம்பாடு செய்யலாம் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.சி.பள்ளிகளில் கட்டாக்கல்வி திட்டத்தில் 25 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து அனைவருக்கு ஆணை பிரப்பிக்கப்பட்டுள்ளது. அது போன்று செயல்பட்டால் நன்மை தரும். நீட் தேர்வு பயிற்சி வகுப்பு பல பிரச்சனைகள் உள்ளது. நீட்தேர்வு விலக்கு கோராமல் பயிற்சி அளிப்பதாக குற்றம் சுமத்துகின்றனர். நீட்தேர்வு வருவதற்கு கையெழுத்திட்டது காங்கிரஸ் ஆட்சிதான் அவர்கள் தான் நீட்தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர். இடையில் நாங்கள் மாட்டிக்கொண்டுள்ளோம். தமிழக முதல்வர் பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் ஆகியோரை சந்திக்கின்ற போதெல்லாம் நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைவைத்துவருகிறோம். அரசு பள்ளிகளில் இந்தி விருப்பபாடமாக வேண்டும் என ஒருசில ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளது குறித்த கேள்விக்கு ஆசிரியர்கள் இருக்கின்ற பாடத்தை ஒழுங்காக சொல்லிக்கொடுத்தாலே போதும் என்றும் தெரிவித்தார். இவ்விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோட்டாட்சியர் தாசில்தார்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பேட்டி:
திரு.கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.