ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் அதிக அளவில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது வாழையில் ஊடுபயிராகத் தர்பூசணி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
தர்பூசணி சாகுபடி
6 அடிக்கு 6 அடி இடைவெளியில் வாழை நடவுசெய்யப்பட்டுள்ள நிலையில், வாழைக்கன்றுகளின் நடுவே உள்ள இடைவெளி பகுதிகளில் மூன்று மாத காலப் பயிரான தர்பூசணி தற்போது நடவுசெய்யப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசன முறையில் நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது.
அறுவடை
மார்ச், ஏப்ரல் மாதங்களில் தர்பூசணி பழங்கள் அறுவடைக்குத் தயாராகிவிடும் என்பதை எதிர்பார்த்து தற்போது வாழையில் ஊடுபயிராக தர்பூசணி சாகுபடி செய்துள்ளோம். இதில், கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழை பயிரிட ஆகும் செலவினத்தை ஈடுகட்ட முடியும்.
கோடைகாலத்தில், தர்பூசணி விற்பனை செய்வதன் மூலம் லாபம் ஈட்ட முடியும் என சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு: அறுவடை செய்யப்படாமல் நிலத்தில் அழுகும் தர்பூசணி