ETV Bharat / state

மறுவாக்குப்பதிவு: மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு - தேர்தல் ஆணையம்

ஈரோடு: காங்கேயத்தை அடுத்த திருமங்கலம் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவுள்ள நிலையில், ஈரோட்டில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

file pic
author img

By

Published : May 10, 2019, 4:09 PM IST

தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது. அதில் ஈரோடு, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட சில தொகுதிகளில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மட்டும் வரும் 19ஆம் தேதி மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதசாகு அறிவித்தார்.

இதில் ஈரோடு மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காங்கேயத்தை அடுத்த திருமங்கலத்தில் உள்ள 248ஆவது வாக்குச்சாவடி மையத்தில் மாதிரி வாக்குபதிவு நீக்கம் செய்யப்படாமல் வாக்குபதிவு நடைபெற்ற காரணத்தினால், இந்த மையத்தில் மட்டும் மறு வாக்குபதிவு நடக்கவுள்ளது.

இந்நிலையில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க உள்ள 936 வாக்காளர்களுக்கு தேவையான ஒரு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்கு எண்ணும் இயந்திரம், விவிபேட், போன்றவற்றை ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கதிரவன் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அவையனைத்தும் இன்று அந்த வாக்குப்பதிவு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஈரோடு 10.05.2019
சதாசிவம்

ஈரோடுநாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கேயம் அடுத்த திருமங்கலம் வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ள நிலையில் ஈரோட்டில் இருந்து வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.மாவட்ட தேர்தல் அதிகாரி கதிரவன் முன்னிலையில் பணியாளர்கள் இயந்திரங்களை எடுத்து சென்றனர்.... 

தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது.அதில் ஈரோடு, தேனி, திருநெல்வேலி,உள்ளிட்ட சில தொகுதிகளில் வாக்குபதிவு க்கு முன்பாக நடைபெற்றும் மாதிரி வாக்குபதிவுகளை நீக்கம் செய்யாமல் அதிகாரிகள் தொடர்ந்து வாக்குபதிவு பணியை தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக அரசியல் கட்சியினர் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூவிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூவின் உத்தரவின் பேரில் வரும் 19ம் தேதி 46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குபதிவு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கேயம் அடுத்த திருமங்களம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 248வது வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குபதிவு நீக்கம் செய்யப்படாமல் வாக்குபதிவு தொடர்ந்து நடைபெற்று இருப்பதால், இந்த மையத்தில் மட்டும் மறு வாக்குபதிவு நடக்கவுள்ளது. இதற்கிடையில் வாக்குச்சாவடி மையத்திற்கு தேவையான வாக்குபதிவு இயந்திரங்கள்,வாக்கு எண்னும் இயந்திரம், விவிபேட்,போன்றவற்றை மாவட்ட ஆட்சியரும்,மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கதிரவன் பார்வையிட்டார்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 248வது மையத்தில் மட்டும் மாதிரி வாக்குபதிவு நீக்கம் செய்யப்படாமல் நடத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த மையத்தில் வாக்களிக்க உள்ள 936 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குபதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரமும்,வாக்கு எண்ணும் இயந்திரம், மற்றும் ஏதேனும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கூடுதல் இயந்திரமும் எடுத்துச்செல்ல இருப்பதாக கூறினார்.மேலும் 23ம்தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை பணிக்காக, வாக்கு பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள மையத்தில் 3அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்..
.
Visual send mojo app
File name:TN_ERD_01_10_COLLECTOR_INSPECTION_VISUAL_7204339.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.