ஈரோடு: கிராமப்புறங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில், சத்தியமங்கலம் அடுத்த காசிபாளையம் இந்திரா நகரில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 48 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதியில் வாழும் 248 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. கரோனா தொற்றுப் பரவாமல் இருக்க கிராமமே தகர தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் அம்மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டனர். வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்விதமாக இந்த 258 குடும்பங்களுக்கும் தலா ரூ.1000 மதிப்புள்ள 20 பொருள்கள் கொண்ட நிவாரணத் தொகுப்பு ரீடு நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பழனிதேவி, ரீடு நிறுவனத்தின் இயக்குநர் கருப்புசாமி ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினர்.
இதையும் படிங்க: கூலித் தொழிலாளியாக மாறிய மருத்துவ மாணவர்; உதவி கோரி ஸ்டாலினுக்கு கடிதம்