ETV Bharat / state

காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்; போக்குவரத்து பாதிப்பு! - ஈரோடு

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்; போக்குவரத்து பாதிப்பு!
author img

By

Published : Jul 29, 2019, 8:04 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி ஊராட்சிக்குட்பட்ட ஒட்டர்கரட்டுப்பாளையம் கிராமத்தில் 750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவரும் நிலையில், இவர்களுக்கு ஒரே ஒரு சின்டெக்ஸ் தொட்டி அமைத்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு மணிநேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது.

இதனால் இப்பகுதி மக்கள் தங்களின் பயன்பாட்டிற்காக ஆற்று நீர் விநியோகம் வேண்டும் என கடந்த பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்; போக்குவரத்து பாதிப்பு!
இந்நிலையில், அந்த ஒரு மணி நேரம் தண்ணீரும் தற்போது இல்லாமல் குடிநீருக்காக ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் கொண்டுவருவதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனு அளித்தும், குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனே இதுகுறித்த தகவலறிந்து கடந்தூர் காவல் துறையினர், கோபிசெட்டிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, குடிநீர் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்படும் என அலுவலர்கள் உறுதியளித்தையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Intro:Body:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி ஊராட்சிக்குட்பட்ட ஒட்டர்கரட்டுப்பாளையம் கிராமத்திற்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோபிசெட்டிபாளையம் - கோவை சாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி ஊராட்சிக்குட்பட்ட ஒட்டர்கரட்டுப்பாளையம் கிராமத்தில் 750க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு அளுக்குளி ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து ஒரே ஒரு சின்டெக்ஸ் தொட்டி அமைத்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு மணிநேரம் மட்;டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவந்துள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் ஆற்று நீர் விநியோகம் செய்யவேண்டும் என கடந்த பல வருடங்களாக போராட்டிவருகின்றனர். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டதால் தற்போது குடிநீருக்காக ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் கொண்டுவருவதாகவும் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனு அளித்துள்ளபோதும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக்கூறியும் ஒட்டர்கரட்டுப்பாளையம் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கோபிசெட்டிபாளையம் - கோவை பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகலறிந்து கடந்தூர் காவல்துறையினர் கோபிசெட்டிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆற்று நீர் விநியோகத்திற்காக மேல்நிலைத்தொட்டி அமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில் ஏன் ஆற்று நீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் ஆழ்துளை கிணறு மூலம் விநியோகிகப்பட்டுவந்த குடிநீர் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் புதிதாக தரைமட்ட தண்ணீர் தொட்டிகள் அமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்யவேண்டும் என்றும் கோரிக்கைவைத்தனர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி அளுக்குளி ஊராட்சியிலிருந்து குடிநீர் வரி செலுத்துவதில்லை என்றும் ஒட்டர்கரட்டுப்பாளையம் கிராமத்திற்கு ஆற்று நீர் விநியோகம் செய்யவேண்டும் என பட்டியலில் இல்லை என்றும் தெரிவித்தால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் வழங்காதவர்கள் ஏன் வாக்கு கேட்டு வகிறார்கள் என்றும் தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றால் குடும்பஅட்டைகள் வாக்களார் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்பட அரசு அக்கீகார அட்டையாள அட்டைகளை அரசுக்கு திரும்ப ஒப்படைப்பதாக கூறினர். அதன்பின்னர் 10 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுகப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி மற்றும் கடத்தூர் காவல்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டதை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கோபிசெட்டிபாளையம் - கோவை பிரதான சாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.