ETV Bharat / state

'கோழியை துரத்திய சிறுத்தை' - காணொலி வைரல்! - ஈரோடு அண்மைச் செய்திகள்

குடியிருப்பு பகுதியில் கோழியை துரத்தும் சிறுத்தை தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோழியை துரத்தும் சிறுத்தை தொடர்பான காணொலி

author img

By

Published : Oct 16, 2021, 3:24 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த வன விலங்குகள் அவ்வப்போது சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று (அக்.15) அதிகாலை சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு சிறுத்தை ஒன்று வந்தது.

கோழியை துரத்தும் சிறுத்தை தொடர்பான காணொலி

சிறுத்தை நடமாட்டத்தால் குடியிருப்புவாசிகள் அச்சம்

அப்போது அங்கு சுற்றித்திரிந்த கோழியை இரையாக்க சிறுத்தை துரத்தியது. இதனையடுத்து சிறுத்தையிடம் இருந்து தப்பிப்பதற்காக, கோழி அதிவேகத்தில் ஓடியது. நடந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.

கேமராவில் பதிவான காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சில தினங்களுக்கு முன்னர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து நாயை அடித்து இழுத்துச் சென்ற சிறுத்தை, மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சம்பவம் ஆசனூர் மலைப்பகுதி கிராம மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

இதையும் படிங்க: பெண் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய அவலம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.