ETV Bharat / state

பூச்சிக்கொல்லி மாத்திரை கொடுத்த கொலை செய்த வழக்கு... விவசாயிக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல்..

கரோனா தடுப்பு மருந்து என கூறி பூச்சி கொல்லி மாத்திரை கொடுத்து 4 பேரை கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கரனோ மருந்து என பூச்சி மருந்து கொடுத்து 4 பேர் கொலை

author img

By

Published : Jan 10, 2023, 11:09 AM IST

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கே.ஜி வலசு பகுதியை சேர்ந்த விவசாயி கருப்பணன் வீட்டிற்கு கடந்த 26.6.2021 அன்று வந்த இளைஞர் ஒருவர் குடும்பத்தில் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கூறி, அதற்கு முன்பாக சில மாத்திரைகளை கொடுத்துள்ளார்.

இதனை சாப்பிட்ட கருப்பணன், அவரது மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் தோட்ட வேலைக்கு வந்த குப்பம்மாள் ஆகிய நான்கு பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்த விசாரணையில் 14 லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்த முடியாமல் கொலைசெய்ய திட்டமிட்டு, கரோனா மருந்து எனக் கூறி பூச்சிக்கொல்லி மாத்திரை கொடுத்த அம்மாபாளையத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் மற்றும் அவருக்கு உதவிய கல்லூரி மாணவன் சபரிஸ் என்ற போத்திஸ்குமார் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த நிலையில் நேற்று (ஜனவரி 9) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கல்யாணசுந்தரத்திற்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், சபரிக்கு ஆயுள் தண்டனையும் விதித்து விதிக்கப்பட்டது. அதோடு இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக கூறிய போலீஸ் - உ.பியைப் போலவே சென்னையில் ஒரு சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.