ETV Bharat / state

கராத்தே போட்டியில் பதக்கங்களை குவித்த அரசுப்பள்ளி மாணவர்கள்...

author img

By

Published : Jan 12, 2022, 11:05 AM IST

ஈரோடு அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கராத்தே போட்டியில் பதக்கங்களை குவித்த அரசுப்பள்ளி மாணவர்கள்

ஈரோடு மாவட்டம், திண்டல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில் தனிநபர் கட்டா போட்டி, தனி நபர் குமித்தே போட்டி, ஓபன் குமித்தே உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இதில் ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட மொத்தம் 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்த போட்டிகளில் பங்குபெற்ற வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 12 கோப்பைகள், 15 மெடல்கள் பெற்று வெற்றி பெற்றனர்.

இதில் 11ஆம் வகுப்பு படிக்கும் கலைவாணி என்ற மாணவி தனிநபர் குமேத்தே பிரிவில் முதலிடமும், தனிநபர் கட்டா பிரிவில் இரண்டாம் இடமும், ஓபன் குமித்தே பிரிவில் முதல் இடம் பிடித்து சைக்கிளையும் பரிசாக வெற்றி பெற்றார்.

கராத்தே போட்டியில் பதக்கங்களை குவித்த அரசுப்பள்ளி மாணவர்கள்...

போட்டிகளில் வெற்றி பெற்று நேற்று (ஜனவரி.11) பள்ளிக்கு வந்த மாணவ,மாணவிகளுக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பயிற்சியாளர் சார்பில் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளிக்குப் பரிசுகளுடன் வந்த மாணவ மாணவிகளுக்குப் பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி பாராட்டி ஊக்கத் தொகை வழங்கினார். ஆசிரியர்கள், மற்றும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மேலும், வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள் பள்ளியில் அளிக்கப்படும் 3 மாத தற்காப்புக் கலை பயிற்சியினை 10 மாதங்களாக உயர்த்தி தருமாறு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ”முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு விவகாரம் : மாநில பட்டியலில் இருந்து ஏன் மாற்றக்கூடாது?”- ஹெச்.ராஜா கேள்வி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.