ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொமராபாளையம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் கொடிக்கம்பங்கள் மற்றும் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று (பிப். 20) இந்த மூன்று கட்சிகளின் கொடிக்கம்பங்கள், பெயர் பலகைகள் சேதப்படுத்தப்பட்டு, கொடிகள் கிழித்துவீசப்பட்ட நிலையில், இதைக் கண்ட கட்சிகளின் பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கொடிக்கம்பங்கள், பெயர்ப் பலகைகளைச் சேதப்படுத்திய அடையாளம் தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மூன்று கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் நேற்று (பிப். 20) சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் - மநீம ஆர்ப்பாட்டம்