ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. திம்பம் முதல் ஆசனூர் வரையில் அதிக குறுகலான மலைப்பாதை அமைந்துள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.
இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு நிலக்கிரி பாரம் ஏற்றிய லாரி ஆசனூர் சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஓட்டுநர் ரகு ஓட்டினார். சாரல் மழை பெய்ததால் வளைவில் திரும்பும்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுநர் ரகு காயமடைந்தார். அதே போல கோயம்புத்தூரில் இருந்து குஜராத்துக்கு டீத்தூள் ஏற்றி சென்ற லாரி, ஆசனூர் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஏற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு தலைமை கொறடாவாக கோவி. செழியன் நியமனம்!