ஈரோடு: மாவட்டம் தாளவாடியில் இருந்து கர்நாடகாவிற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் தாளவாடி காவல் துறையினர் பையனாபுரத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சென்ற டெம்போவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 26 பிளாஸ்டிக் சாக்குப் பைகளில் 1,250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து டெம்போவில் இருந்த அருள்வாடி கிராமத்தைச் சேர்ந்த சிவண்ணா, தர்ஷன் ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், ரேஷன் அரிசியை அதிக விலைக்குக் கர்நாடகாவில் விற்பனை செய்ய முயன்றதாகத் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் அந்த இரண்டு நபர்கள் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா பாதித்த சிலருக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட கிராமம்