ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஆலந்தூரைச் சேர்ந்தவர் ஜோதிடர் பழனிசாமி (57). ஆப்பக்கூடல் அருகே மல்லியூரைச் சேர்ந்தவர் சரோஜா (47). இவர்கள் இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சரோஜாவின் உறவினர்கள் பழனிசாமியை கண்டித்துள்ளனர். இருந்தபோதிலும், அவர்களது எதிர்ப்பை மீறி அவர்களது உறவு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், ஏப். 10ஆம் தேதி சரோஜாவின் உறவினர்கள் ஜோதிடர் பழனிசாமியை கல்லால் அடித்துக் கொலை செய்தனர்.
இது தொடர்பாக ஆப்பக்கூடல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சரோஜாவின் உறவினர்களான கோவிந்தன் (42), பிரபு (30), குமார் (32) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய சென்னாநாயக்கர் (45), அவரது மகன் சூரிய பிரகாஷ் (18) ஆகிய மேலும் இருவரை நேற்று (ஏப்.11) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் ஜோதிடர் கல்லால் அடித்துக் கொலை!