ETV Bharat / state

ஒற்றை யானையை பிடிக்க மீண்டும் 2 கும்கிகள் வருகை: 2-வது முறையாக "ஆப்ரேசன் கருப்பு" - Sathyamangalam Tiger Reserve

விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் கருப்பனை பிடிக்க மீண்டும் 2 கும்கிகள் வருகை தந்துள்ளது. ஆகையால், இரண்வடாது முறையாக ஆப்ரேசன் கருப்பு துவக்கப்பட்டுள்ளது.

opration karuppu
ஆப்ரேசன் கருப்பு
author img

By

Published : Mar 24, 2023, 12:04 PM IST

ஒற்றை யானையை பிடிக்க மீண்டும் 2 கும்கிகள் வருகை: 2 வது முறையாக "ஆப்ரேசன் கருப்பு" துவக்கம்

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்கு அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடுவதுமாக தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஓராண்டாக தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு ஒற்றை யானை விவசாயத் தோட்டத்தில், புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது.

அதேபோல விவசாயத்தோட்டத்தில் காவலுக்கு இருந்த தர்மபுரம் பகுதியைச்சேர்ந்த மல்லப்பா என்ற விவசாயி மற்றும் திகினாரை ஜோரைகாடு பகுதியைச் சேர்ந்த மாதேவா என்ற விவசாயியையும்; அந்த ஒற்றை யானை மிதித்துக் கொன்றது. கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாயத்தோட்டத்தில் புகுந்து தொடர்ந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம், முட்டைக்கோஸ், பயிர்களைச் சேதம் செய்வது யானையை விரட்டும் விவசாயிகளையும் ஒற்றை யானை துரத்துவதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப்பகுதியில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த கருப்பன் யானையைப் பிடிக்க வந்த முத்து, கபில்தேவ் மற்றும் கலீம் ஆகிய கும்கி யானைகள் கடந்த ஜனவரி 12-ம் தேதி தாளவாடி வந்தன. "ஆப்ரேசன் கருப்பு" என்ற பெயரில் தொடர்ந்து 3 நாள்களாக கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் மரியபுரம், சூசைபுரம், இரிபுரம் பகுதியில் நடமாடிய கருப்பனை பிடிக்க கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டன.

அதன் பின்னர் கருப்பன் யானைக்கு இரு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனால், கருப்பன் யானை வனத்துறையினரிடம் மாட்டிக்கொள்ளாமல் சாமர்த்தியமாக தப்பியது. 16 நாள்களாக தாளவாடி திகினாரை முகாமில் தங்கியிருந்த 3 கும்கிகளின் பாகன்கள் தாய்லாந்து பயிற்சிக்கு செல்ல உள்ளதால், 3 கும்கிகள் மீண்டும் அந்தந்த முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து மீண்டும் கருப்பன் யானை விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது. ஆகையால், கருப்பனை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் ஜீரஹள்ளி வனச்சரகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

அங்கு வந்த மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குலா மீனா விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கருப்பன் யானையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக கருப்பன் யானை கரும்புத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. தாளவாடி வனச்சரகத்திக்கு உப்பட்ட கும்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராசு (52). இவரின் கரும்பு தோட்டத்தில் நேற்று முன் தினம் இரவு கருப்பன் யானை 8 மணியளவில் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது.

பின்னர் இந்தச் சம்பவம் குறித்து கிராம மக்கள் தாளவாடி வனத்துறைக்குத் தகவல் அளித்தனர். 'யானை கரும்பு பயிர்களை திங்கட்டும்; நாங்கள் மயக்க ஊசி செலுத்தி கருப்பனை பிடிக்கிறோம்' என வனத்துறையினர் கூறியுள்ளனர். ஆனால், விடிய விடிய கரும்பு பயிர்களை தின்ற யானை அதிகாலையில் அசந்த நேரத்தில் வனப்பகுதியில் சென்றது. ஒரே நாளில் யானையால் விடிய விடிய 2 ஏக்கர் பரப்பளவு உள்ள கரும்பு நாசம் ஆனது.

கடந்த 1 மாதத்தில் மட்டும் கருப்பன் யானையால் 8 ஏக்கர் பரப்பளவு உள்ள கரும்புகள் நாசமாகியுள்ளன. வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கருப்பன் யானையை வனத்துறையினர் விரைந்து பிடிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையடுத்து தாளவாடி வனப்பகுதியில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த கருப்பன் யானையைப் பிடிக்க இரு தினங்களுக்கு முன் பொம்மன், சுஜய் ஆகிய 2 கும்கிகள் தாளவாடி வந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் கருப்பன் யானைக்கு மயக்க மருந்து செலுத்தியும் கருப்பன் யானை வனத்துறையினர் பிடியில் சிக்காமல் தப்பியது.

இதனால் இம்முறை கருப்பன் யானைக்கு மயக்க மருந்து செலுத்தி பிடிக்க அனுபவம் பெற்ற கால்நடை மருத்துவர்கள் மனோகரன், சதாசிவம், ராஜ்குமார் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. ஜோரக்காடு கரும்புத் தோட்டங்களில் ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் குளிர்காலம் என்பதால் யானை மயக்க நிலையடைய காலதாமதமாகி, யானை வனத்துக்குள் தப்பியது. தற்போது கோடைக்காலம் என்பதால் மயக்க மருந்து சிறப்பாக செயலாற்றும் என அதனைப் பிடிக்க தீவிர முயற்சியில் வனத்துறை ஈடுபட்டுள்ளதை கண்டு கிராம மக்கள் அவர்கள் செயல்களை வரவேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: அப்போ எனக்கும் பசிக்கும்ல! - குஜராத்தி உணவுகளை ஒரு பிடிபிடித்த ராகுல் காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.