ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில், வனச்சரகர் தினேஷ் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வனப்பகுதியில் சந்தேகப்படும்படி இரண்டு பேர் நின்றுகொண்டிருந்தனர். பின் வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அவர்கள் இருவரும் கடம்பூர் அணைக்கரை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் கர்நாடக மாநிலம் தம்பிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அடர்ந்த காப்புக்காட்டில் அனுமதியின்றி சுற்றித்திரிந்த குற்றத்துக்காக மாவட்ட வனஅலுவலர் கே.பி.ஏ. நாயுடு இருவருக்கும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இந்திய தொழிலதிபர்களை குறிவைத்து நைஜீரிய கும்பலை பண மேசடி: ஒருவர் கைது!