தமிழ்நாடு, கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதை உள்ளது. திம்பம் மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்நிலையில், கர்நாடகமாநிலம் சாம்ராஜ்நகரிலிருந்து தேங்காய்மட்டை பாரம் ஏற்றிய லாரி ஒன்று திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, லாரி ஒன்றாவது கொண்டைஊசி வளைவில் சென்றுகொண்டிருந்தபோது பாரம் தாங்காமல் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லாரியிலிருந்து தேங்காய்மட்டைகள் சாலையில் சிதறி விழுந்தன. இதில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் பிரபாகரன் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்துக்குப் பின் லாரி மீட்கப்பட்டது. அதன்பின் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மனநலம் பாதித்தவர்களுக்கு உதவி மனிதம் காத்த காவல்துறையினர்!