ETV Bharat / state

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - traffic near dhimbam ghats road due to lorry accident

ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதை அடுத்து மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

traffic near dhimbam ghats road due to lorry accident

author img

By

Published : Dec 17, 2020, 10:44 AM IST

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் தமிழநாடு-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உடுமலைப்பேட்டையிலிருந்து கோழிக்கழிவு ஏற்றியவந்த லாரி இன்று (டிச. 17) அதிகாலை 3 மணியளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

லாரி கவிழ்ந்து விபத்து

இதனிடையே 6ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதனால் மலைப்பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

சம்பவ இடத்துக்குச் சென்ற சத்தியமங்கலம் காவல் துறையினர் போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன் பின்னர் பண்ணாரியிலிருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கும் பணி நடைபெற்றது.

போக்குவரத்து பாதிப்பு

மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பின் லாரி மீட்கப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இதன் காரணமாக சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க...பொள்ளாச்சி அருகே தேய்காய் குடோனில் தீ விபத்து!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.