ETV Bharat / state

நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவி!

ஈரோடு: அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில், தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சம்சிகா மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

top-favorite-govt-school-student-in-district-level-in-neet-exam

author img

By

Published : Nov 1, 2020, 5:14 PM IST

ஈரோடு மாட்டம் சத்தியமங்கலம் அடுத்த முடுக்கன்துறை ஊராட்சியைச் சேர்ந்த நெசவு தொழிலாளி ராஜசேகரன் என்பவரது மகள் சம்சிகா. இந்தாண்டு தொட்டம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்ற இவர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நடத்தும் இ - பாக்ஸ் பயிற்சி மூலம் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று தேர்வு எழுதினார்.

நீட் தேர்வு முடிவில் இவர் 284 மதிப்பெண்கள் பெற்று ஈரோடு மாவட்டத்தில், அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதியவர்களில் சம்சிகா மாநில அளவில் 22ஆவது இடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி 7.5 சதவீத ஒதுக்கீட்டினால் நெசவுத் தொழிலாளியின் மகளுக்கு மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:அமைச்சர் துரைக்கண்ணு உடலுக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.