சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட கெட்டவாடி, அருள்வாடி, திகினாரை, மல்லன்குழி சூசைபுரம், தொட்டகாஜனூர், ஒசூர் பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக 10-க்கும் மேற்பட்ட ஆடுகள், 20-க்கும் மேற்பட்ட நாய்களை சிறுத்தை ஒன்று அடித்துக்கொன்றது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கிக்கொள்வது வாடிக்கையாகி விட்டது.
இதனால் வனத்துறையினர் கூண்டு வைத்தும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்குகாட்டி வந்தது. சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் ஒசூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் வீட்டு, கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்துக்கொன்றது. அதேபோல் பீம்ராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் வீட்டு நாயையும் சிறுத்தை கடித்துள்ளது.
தற்போது சிறுத்தை நடமாட்டம் உள்ள பீம்ராஜ்நகர் அருகே உள்ள ஓடையில் வனத்துறையினர் கூண்டு வைத்ததோடு, கூண்டினுள் நாய் ஒன்றையும் கட்டி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் சிக்கிக் கொண்ட தமிழ்நாடு மாணவ - மாணவிகள்