ஈரோடு: சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனுக்கு ஆண்டு தோறும் அவரது நினைவை போற்றும் வகையில் அரசு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் குமரனுக்கு அவர் பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கையும் இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழக அரசு திருப்பூர் குமரன் பிறந்த ஊரான சென்னிமலையிலும், அதேபோல சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படை தளபதியாக இருந்த பொல்லானுக்கம் நினைவு மண்டபம் அமைக்க அறச்சலூர் நல்லமங்காபாளையம் பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சு.முத்துசாமி திருப்பூர் குமரன் மற்றும் பொல்லானுக்கு நினைவு அரங்கம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த இடம் பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கார்கில் வெற்றி தினம் கொண்டாட்டம்