சத்தியமங்கலம் எஸ்ஆர்என் லேன் பகுதியில் தனியார் மருத்துவமனைக்கு மூன்றாவது தளம் அமைக்கும் கட்டுமானப்பணி நடைபெற்றுவருகிறது. இங்கு பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அப்போது சன்சாத் என்ற தொழிலாளி செல்போனில் டிக் டாக் வீடியோ பார்த்துக்கொண்டே வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது டிக் டாக்கில் மூழ்கிப்போன சன்சாத் எதிர்பாராத விதமாக மூன்றாவது தளத்தில் இருந்து கால் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனே பதறிப்போன சக தொழிலாளர்கள் கீழே விழுந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் பாதி வழியிலேயே சன்சாத் உயிரிழந்தார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சத்தியமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
மேலும், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி தன்னை மறந்த நிலையில் செல்போனில் டிக் டாக் பார்த்து உயிரிழந்த சம்பவம் இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.