ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தாளவாடியை அடுத்த ஜீரஹள்ளி வனப்பகுதியில் சிறுத்தை, புலிகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் சிமிட்டஹள்ளி வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த 7 வயதுள்ள புலி, அருகில் இருந்த கிராமத்துக்குள் புகுந்தது.
இதனால் பீதி அடைந்த கிராமமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த வனத்துறையினர் புலியின் கால்தடத்தை ஆய்வு செய்து அது பதுங்கியிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர். தற்போது மயக்க மருந்து செலுத்தி அதனை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.