ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகையின்போது, சவுடேஸ்வரி அம்மன் திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகன சப்பரத்தில் சவுடேஸ்வரி அம்மன் எழுந்தருளினார். கோயிலில் இருந்து புறப்பட்ட அம்மன் சப்பரத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்றபோது கிராம மக்கள் அம்மனை வழிபட்டனர்.
அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியில் பேண்டு வாத்தியக் குழுவினரின் இசை வாசிக்கப்பட்டது. அப்போது இளைஞர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர்களின் மத்தியில் மூன்று வயதுள்ள சுதாகர் என்ற குழந்தை ஒன்றும் இணைந்து கொண்டு பேண்டு வாத்திய இசைக்கேற்ப அசத்தலாக நடனமாடியது. இதைக்கண்ட பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். இளைஞர்களின் நடனத்திற்கு இணையாக குழந்தை நடனமாடிய காட்சி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
இதையும் படிங்க: திருக்குறள் ஒப்புவித்தால் பரிசு