கோவை சாரங்க நகரை சேர்ந்தவர் கண்ணன்குமார். இவர் பனியன் கம்பெனியில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், "கடந்த 24ஆம் தேதி புஞ்சை புளியம்பட்டி - பவானிசாகர் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே நின்றிருந்த போது, ஆம்னி காரில் வந்த மூன்று பேர், தன்னை கடத்தி சென்று கடுமையாக தாக்கியதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், திருப்பூர் அவிநாசியை சேர்ந்த மயில்சாமி, கருப்புசாமி, கோவிந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
மயில்சாமியின் மனைவிக்கும், கண்ணன் குமாருக்கு முறையற்ற தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதானல் ஆத்திரம் அடைந்த மயில்சாமி நண்பர்களுடன், கண்ணன் குமாரை தாக்கியது தெரியவந்தது.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க உத்தரவிடுவோம் - சென்னை உயர்நீதிமன்றம்