ETV Bharat / state

3ஆவது புரட்டாசி சனிக்கிழமையில் கம்பத்ராயன்கிரி மலையுச்சியில் தீபமேற்றிய பக்தர்கள் - Thousands of devotees at Puratasi festival

மழைப்பொழிவை கணிக்கும் பெருமாள் கோயிலில், புரட்டாசி மாதத்தை ஒட்டி கம்பத்ராயன்கிரி மலையுச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றினர்.

Etv Bharat3வது புரட்டாசி சனிக்கிழமையில் கம்பத்ராயன் கிரி மலைஉச்சியில் தீபமேற்றிய பக்தர்கள்

author img

By

Published : Oct 9, 2022, 12:18 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள கம்பத்ராயன்கிரி நரசிம்ம பெருமாள் கோயிலில் மூன்றாவது சனிக்கிழமையான நேற்று(அக்-8) நடந்த புரட்டாசி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 7 மலைகளைக் கடந்து தரிசனம் செய்ய இங்கு வருவதே இதன் சிறப்பாகும். சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை பகல் என இரு நாள் விழாவாக நடைபெற்ற இவ்விழாவில் சத்தியமங்கலம், மைசூர், சாம்ராஜ்நகர், கோபி, புன்செய் புளியம்பட்டி, கடம்பூர், அந்தியூர் உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விரதம் இருந்து காலணி இன்றி அடர்ந்த 7 மலைக்குன்றுகளை கடந்து கோயிலுக்குச்சென்றனர். இக்கோயிலில் நரசிம்ம பெருமாளுக்கு 19 அடி உயரம் கொண்ட கருடக்கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

மலைகளுக்கு நடுவே மலை உச்சியில் கோயிலில் ஏற்றப்பட்ட தீபம் 30 கி.மீ. தூரமுள்ள புன்செய்புளியம்பட்டி வரை தெரிந்தது. இந்த தீபஒளியை கொண்டப்பநாயக்கன்பாளையம், அத்திபண்ணகவுண்டர்புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீட்டில் இருந்தபடி பார்த்துவிட்டு, தங்களது நோன்பு விரத்ததை முடித்துக்கொண்டனர்.

3ஆவது புரட்டாசி சனிக்கிழமையில் கம்பத்ராயன்கிரி மலைஉச்சியில் தீபமேற்றிய பக்தர்கள்

அதனைத்தொடர்ந்து தீர்த்தப்பாறை தீர்த்தம் கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தீர்த்தப்பாறை என்ற இடத்தில் தீர்த்தப்பாறைக்கு அடியில் வைக்கப்பட்ட குவளையில் நீர்நிரம்பும் அளவைப் பொருத்து, அந்தாண்டில் மழை பெய்யும், மக்கள் வளம் பெருவார்கள் என்பது ஐதீகம்.

இதையும் படிங்க:WEEKLY HOROSCOPE... அக்டோபர் 2ஆம் வாரத்திற்கான ராசிபலன்... எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது..?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.